தமிழருக்கு அதிகாரம் இலங்கை வழங்காது; பா.ஜ.க. தலைவர்

8.2.13

இலங்கையில் தமிழர் பாதுகாப்பு மற்றும் புனர்வாழ்வு விடயங்களில் இந்தியா கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும் தீர்வு விடயத்தில் இந்திய அரசு அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை வழங்க இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. உட்பட சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழித்து தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வை வழங்காமலிருக்கவே இலங்கை அரசு முயற்சிக்கிறது என இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இலங்கையில் தமிழர் பாதுகாப்பு மற்றும் புனர்வாழ்வு விடயங்களில் இந்தியா கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும் தீர்வு விடயத்தில் இந்திய அரசு அதிக அக்கறை காட்ட வேண்டும் எனவும் அகில இந்திய பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்துவெளியிட்ட ராஜ்நாத் சிங், ஏற்கனவே அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை இலங்கை அரசு நிறைவேற்றத் தவறியுள்ளது எனவும், 13ஆவது திருத்தத்தை நீக்கி தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வை வழங்காமலிருக்கவே இலங்கை அரசு தொடர்ந்து செயற்பட்டு வருகிறது என்றும் குற்றஞ்சாட்டினார். பாரதீய ஜனதாவின் புதிய தலைவராக பொறுப்பேற்ற சில தினங்களிலேயே ராஜ்நாத் சிங் இந்த அதிரடியான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இந்து சமுத்திரத்தில் சீனா பலமாக நிலைகொள்வதற்கு இலங்கை உதவிகளை தாராளமாக வழங்குகிறது எனச் சாடிய அவர், இந்தியாவைப் பலவீனப்படுத்தும் இந்த முயற்சியில் இலங்கைக்குப் பாகிஸ்தானும் துணைபோகிறது எனவும் கண்டனம் தெரிவித்தார். தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கை அரசுடன் உரிய பேச்சு நடத்த வேண்டும். காவிரி நதிநீர் விகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் கருத்து வெளியிட்டார்

0 கருத்துக்கள் :