ராஜபக்ஷவின் விஜயத்துக்கு எதிர்ப்பு: டெல்லியில் வைகோ கைது

8.2.13

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, டில்லி பொலிசார் கைது செய்துள்ள சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. ஒடிசா மாநிலம் கயா மற்றும் திருப்பதி எழுமலையான் கோவிலுக்கு செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மத்திய அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா வருவதற்கு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ம.தி.மு.க. சார்பில் டெல்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக வைகோ அறிவித்தார். இதற்காக ம.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ரயில் மற்றும் விமானம் மூலம் டெல்லி சென்றனர். சுமார் 1000 தொண்டர்கள் டெல்லியில் குவிந்தனர். அவர்கள் அனைவரும் இன்று காலையில் ஜந்தர்மந்தரில் திரண்டனர். பிரதமர் இல்லம் இருக்கும் ரேஸ்கோர்ஸ் சாலையில் 144 தடை உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது. அங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பொலிஸ் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்தார். அதன்படி அனைவரும் பிரதமர் இல்லம் நோக்கி புறப்பட்டனர். அப்போது வைகோ உள்பட அனைவரையும் பொலிசார் கைது செய்தனர். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துக்கள் :