அமெரிக்காவின் யோசனையால் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல்!- சண்டே டைம்ஸ்

17.2.13


ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் யோசனையால் இலங்கைக்கு பாரிய பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் அந்த யோசனையின்படி ஐக்கிய நாடுகளின் போர்க்குற்றம் தொடர்பான விசேட நிபுணர்களுக்கு இலங்கையில் சுதந்திரமான நடமாட்டத்துக்கு கோரிக்கை விடுக்கப்படவுள்ளது. பேச்சு சுதந்திரம், ஒன்றுக்கூடும் சுதந்திரம், சித்திரவதைகள் மற்றும் காணாமல் போதல் போன்ற விடயங்கள் தொடர்பில் இந்த நிபுணர்களின் செயற்பாடு அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பக்கங்களை கொண்ட இந்த யோசனையின்படி இலங்கைக்கு யோசனையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஒரு வருட அவகாசம் வழங்கப்படவுள்ளது. அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையும் இந்த யோசனையில் தீவிரமாக வலியுறுத்தப்படவுள்ளது.

0 கருத்துக்கள் :