எனது கணவரை தூக்கில் போட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம்

14.2.13

சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் நடத்திய தாக்குதல் மற்றும் கொலையில் தமிழக, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த போலீசார், வனத் துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட 169 பேர் இறந்தனர். இந்த சம்பவத்தில் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள கருங்கல்லூர் கோட்ட மடுவு பகுதியை சேர்ந்த மீசை மாதையனும் வீரப்பனுக்கு உதவியாக இருந்தார்.
இதற்கிடையே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ள மீசை மாதையன் கருணை மனு நிராகரிக் கப்பட்டுள்ளது. இந்த செய்தி அறிந்த மீசை மாதையனின் மனைவி தங்கம்மாள்,
’’எனது கணவர் மீசை மாதையன் என்றாவது ஒருநாள் திரும்பி வருவார் என்ற ஆசையில் தான் வாழ்ந்து வருகிறேன். எந்த தவறும் செய்யாத அவரை விடுவிக்க வேண்டும். ஏற்கனவே எனது முதல் மகன் மாதேஸை அதிரடி படையினர் சுட்டு கொன்று விட்டனர். தற்போது மற்றொரு மகன் பரமசிவத்துடன் வாழ்ந்து வருகிறேன்.

நாங்கள் 25 ஆண்டுகளாக வறுமையில் தான் வாடுகிறோம், மூத்த மகனை இழந்த நிலையில் கணவரையும் தூக்கு மேடைக்கு அனுப்பப்படும் செய்தியை தாங்கி கொள்ள முடியவில்லை. எனது கணவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும். அவர் இல்லாவிட்டால் குடும்பத்துடன் தற் கொலை செய்வோம்’’ என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :