கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதி பொலிஸாரினால் முற்றுகை

12.2.13

கொள்ளுப்பிட்டி காலி வீதி கடற்கரை பகுதியில் உள்ள இரவு களியாட்ட விடுதி ஒன்றில் இயங்கி வந்த விபச்சார பிரிவு ஒன்று நேற்றிரவு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட குற்றம் மற்றும் வன்புணர்வு ஒழிப்பு பிரிவு நேற்றிரவு மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது. குறித்த விடுதியில் இருந்து இரண்டு தாய்லாந்து பெண்கள், ஒரு சீன பெண், சீதுவ, வாதுவ, வாரியபொல, மொராந்துடுவ பிரதேசங்களைச் சேர்ந்த 24 தொடக்கம் 36 வயது மதிக்கத்தக்க ஐந்து இலங்கை பெண்களும் ஹட்டன் - நோர்வூட் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

0 கருத்துக்கள் :