உலகிலேயே முதன்முதலாக விண்வெளியில் எழுதி ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல்

11.2.13

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்தபடியே எழுதி, பாடப்பட்ட முதல் பாடல் கனடா நாட்டில் உள்ள டொராண்டோ நகரில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கனடா நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர், கிரிஸ் ஹாட்ஃபீல்ட் தனது நண்பரான பிரபல இசைக்குழுவின் முதன்மை பாடகர் எட் ராபர்ட்சனுடன் இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இருவரும் இணைந்து எழுதிய இந்த பாடலை கிரிட் ஹாட்ஃபீல்ட் விண்வெளியில் இருந்தவாறே 'கிட்டார்' இசைக்க எட் ராபர்ட்சன் பாடினார். செயற்கைகோள் உதவியுடன் டொராண்டோவில் உள்ள ஒலிப்பதிவு கூடத்தில் இசைக்கலவை செய்யப்பட்டு இப்பாடல் வீடியோவாக உருவாக்கப்பட்டது. 'ஐ.எஸ்.எஸ்.' ஈஸ் சம்படி சிங்கிங் (யாராவது பாடுகிறார்களா) என்ற பல்லவியுடன் தொடங்கும் இப்பாடல், விண்வெளி வீரர் ஒருவர், பூமியில் வசிக்கும் தனது அன்பிற்குரியவர்களை பிரிந்து பாடுவது போல் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னரே, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்தவாறு விண்வெளி வீரர் காடி கோல்மேன்-னுடன் பூமியில் இருந்தவாறு லேன் ஆண்டர்சன் இணைந்து பாடிய பிரபல இசைக்குழுவின் 'பவ்ரீ' என்ற பாடல் கடந்த 2011 ஏப்ரல் மாதம் செயற்கைக் கோள் மூலமாக ஒலிபரப்பப்பட்டது. எனினும், புதிதாக இயற்றி இசையமைக்கப்பட்டு விண்வெளியில் இருந்து பாடிய தனிப்பாடல் ஒலிப்பதி வானது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

1 கருத்துக்கள் :

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

உன்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)