பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் பலி உயர்வு 60

17.2.13

பாகிஸ்தான் குயெட்டா நகரில் சனிக்கிழமை நடந்த ‌பயங்கர குண்டு வெ‌டிப்பில் 69 பேர் பலியானார்கள் மேலும் 200 பேர் காயமடைநதனர். பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியான இந்தப் பிராந்தியத்தில் குண்டுவெடிப்புகள் சாதாரணமாகவும் அடிக்கடி நிகழக்கூடியதாகவும் இருக்கிறது. இச்சம்பவம் பாகிஸ்தான் குயெட்டாவின் ஹசாரா டவுன், கிரானி சாலையில் நடந்தது. இப்பகுதியில் உள்ள ஷியா இனத்தவர்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலை மார்கெட் பகுதியில் உள்ள கட்‌டிட தூண் அருகே நிறுத்திய வாகனத்தில் வெடிகுண்டு வைத்து ரிமோட் மூலம் இயக்கி இச்சம்பவத்தை அரங்கேற்றியிருப்பதாக டி.ஐ.ஜி., வாஷிர் கான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காயமடைந்தவர்களை மருத்துவவையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதில் இரு கட்டிடங்களும் நாசமடைந்தன. அப்பகுதியில் உள்ள பல கடைகள் மற்றும் வாகனங்கள் தகர்க்கப்பட்டன. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :