இலங்கைத் தூதரகம் வெள்ளி மாலை 4 மணிக்கு முற்றுகை: மனிதநேய மக்கள் கட்சி!

22.2.13

இலங்கைத் தூதரகத்தை வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு முற்றுகை இட்டுப் போராட்டம் நடத்தவுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து அக் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிட்ட அறிக்கையில்,
இலங்கையில் இறுதிப் போருக்குப் பின் சிறைப் பிடிக்கப்பட்ட பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், அவரின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். ஈவு இரக்கமற்ற இப்படுகொலை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இக்கொடுஞ்செயலைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி நடத்துகிறது.

வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு லயோலா கல்லூரி அருகிலிருந்து முற்றுகை ஊர்வலம் தொடங்கப்பட உள்ளது.

- இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :