சனல் 4 தொலைக்காட்சிக்கு ஆதாரங்களை வழங்கியது யார்?

22.2.13

ஈழத்தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பை உலகின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் வெளிக்கொண்டுவந்ததில் சனல் 4 தொலைக்காட்சியினதும் அதன் பணியாளர்களினதும் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆனால், அவர்களுக்கான உறுதியான ஆதாரங்கள் எவ்வாறு கிடைக்கின்றது எனபது பலருக்கு தெரியாமலே இருந்து வந்தது.
இந்தநிலையில், தமக்கான ஆதாரங்களை இலங்கையில் சனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka) என்ற அமைப்பே வழங்கியதாக சனல் 4 ன் பணியாளரும், நோ பயர் சூன் (No Fire Zone)என வெளிவர இருக்கும் ஆவணப்படத்தின் தயாரிப்பாளருமான கலம் மக்ரே வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி காண்பதற்கான போராட்டத்தில் இலங்கையில் சனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பின் பணி முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் சனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பில் தமிழ் சிங்கள ஊடகவியலாளர்கள் இணைந்து பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசு தமிழர்களை அழிப்பதற்கு உதவி புரிந்த ஆளும் காங்கிரஸ் மன்மோகன் சிங் பகிரங்க மனிப்பு கேட்க வேண்டும் அத்துடன் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் அத்துடன் இனியாவது தாம் செய்த தவறுகளை திருத்தி ஈழ தமிழர்களுடன் நல்லுறவை வளர்க்க வேண்டும் என நெடுமாறன் மற்றும் சில இதர கட்சிகள் கூறியுள்ளனர் பிரபகாரன் மகன் பாலசந்தர் படுகொலை காட்சிகள் தமிழகத்தில் அனைத்து கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளன

0 கருத்துக்கள் :