சனல் 4 பேட்டியில் இலங்கை அரசை கண்டித்துள்ள நவநீதம்பிள்ளை!

18.2.13

சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் பரான் சவுகரலி மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்ட சம்பவம், தொடர்பாக தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக நவிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா மற்றும் இலங்கை குடியுரிமையுள்ள குறிப்பிட்ட ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்க விடயம் என்று குறிப்பிட்டுள்ள நவிப்பிள்ளை, இலங்கை அரசு இதற்கு பதில் கூறவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4 , நவிப்பிள்ளையை நேற்றைய தினம் நேர்காணல் கண்டுள்ளது. இதில் இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற, கொலைகள் தொடர்பாகவும் அலசி ஆராயப்பட்டது.

இலங்கை அரச படைகள், மற்றும் பொலிசாரால் மேற்கொள்ளப்படும் கொலைகள் தொடர்பாக இலங்கை அரசானது இராணுவ நீதிமன்றங்களை அமைத்து விசாரணை நடத்தவேண்டும் என நவிப்பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார்.

மற்றும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைக் கவுன்சில் மாநாட்டிற்கு, தாம் ஒரு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :