ஈராக்கில் கார் குண்டு தாக்குதல்: 30 பேர் பலி

3.2.13

ஈராக்கில் அமைந்துள்ளது கிர்குக் நகரம். இங்குள்ள போலீஸ் தலைமையகத்தை சுற்றிவளைத்த தீவிரவாதிகள் இன்று காலை துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். அப்போது குண்டுகள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்த தீவிரவாதி ஒருவன் அந்த கட்டிடத்தின் மீது மோதி வெடிக்கச்செய்தான். இதில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த பொதுமக்கள் 30 பேர் கொல்லப்பட்டனர். 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கட்டிடம் முழுவதும் உடைந்து சிதைந்து போயின. இருந்தும் அவர்களால் போலீஸ் தலைமையகத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியவில்லை. இத்தாக்குதலுக்கு எந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என்பது குறித்த தகவல் இல்லை. தாக்குதலை அடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :