2 ஈழத் தமிழர்கள் தாய்லாந் ATM இல் கொள்ளை: 2 மில்லியன் பாத் பணம் பிரான்சுக்கு மாறியது எப்படி?

15.2.13


நேற்றைய தினம் 2 ஈழத் தமிழர்கள் தாய்லாந்தில் (Pattaya) என்னும் நகரில் கைதாகியுள்ளார்கள். அன் நாட்டில் இயங்கும் (Siam Commercial Bank) கொடுத்த ரகசியத் தகவலுக்கு அமைவாக, பொலிசார் இவ் இருவரையும் கைது செய்துள்ளார்கள். இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களால்...
தாய்லாந்துப் பொலிசாரே ஆடிப்போயுள்ளார்கள் என்றால் பாருங்களேன். பிரித்தானிய குடியுரிமை பெற்ற இவர்கள், தேவராஜா கணராஜா மற்றும் நாராயனசாமி மோகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். குறிப்பிட்ட இவ்விரு இளைஞர்களும் தாம் கொண்டு சென்ற கள்ள மட்டையைப் பாவித்து, சுமார் (2 million baht) 2 மில்லியன் (தாய்லாந் காசு) ஏ.ரி.எம் இயந்திரமூடாகப் பெற்று, அதனை முதல் கட்டமாக பிரான்சில் உள்ள தமது முகவர்களுக்கு அனுப்பியுள்ளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரான்சில் உள்ள இந்த முகவர்கள் யார் என்பது தொடர்பாக, தாய்லாந்துப் பொலிசார் விசாரணைகளை முடிக்கிவிட்டுள்ளார்கள். இது இவ்வாறு இருக்கையில், பிரித்தானியாவில் மிக மிக இலகுவாக எடுக்கக்கூடிய பிளாஸ்டிக் கார்டுகளான , ஆகோஸ் கார்ட், டெபனம்ஸ் கார்ட், ரி-மோபைல் காட் என்று பல பிளாஸ்டிக் மட்டைகளை எடுத்து, அதன் பின் புறத்தில் உள்ள மக்னெட் ஸ்ரிப்பில், வேறு வங்கி அட்டைகளின் தரவுகளைப் புகுத்தி, அதனை ஏ.ரி.எம் இயந்திரத்தினுள் செலுத்தி பணத்தை கறந்துள்ளார்கள் இந்த இரண்டு நபர்கள்.


 அதி உச்ச தொழில் நுட்ப்பத்தைப் பாவித்தே இவர்கள் பணத்தை , இயந்திரத்தினுள் இருந்து வெளியே எடுத்துள்ளார்கள். ஆனால் தொடர்ந்து செய்துவந்ததால் இவர்கள் மாட்டிக்கொள்ளும் நிலை தோன்றியுள்ளது. வீதியோரமாக பொலிசார் இவர்களைக் கைதுசெய்து, இவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். குறிப்பிட்ட இந்த 2 நபர்களும் தங்கியிருந்த அறைக்குள் இருந்து சுமார் 140 கள்ள மட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, 22,000 பாத் (தாய்லாந்து காசும்) கைப்பற்றப்பட்டுள்ளது என பத்தையா பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள். பிரான்சில் உள்ள முகவர்கள் சிலர், குறிப்பிட்ட கள்ள கிரெடிட் கார்டுகளை இவர்களிடம் கொடுத்து, இவர்களை தாய்லாந்துக்கு அனுப்பி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எய்தவர்கள் எங்கோ இருக்க அம்பு மாட்டிக்கொண்ட கதையாக இருக்கிறது இவர்கள் நிலை. தாய்லாந்தில் உள்ள கடுமையான சட்டதிட்டங்களில் இவர்கள் தற்போது சிக்கியுள்ளார்கள்.

0 கருத்துக்கள் :