13வது திருத்தத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை மன்மோகன்சிங்

23.2.13

தமிழர் பகுதிகளுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக சிறிலங்கா அளித்த வாக்குறுதி விடயத்தில், எந்த விட்டுக் கொடுப்புக்கும் இடமில்லை என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று தம்மைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமே அவர் இந்த வாக்குறுதியைக் கொடுத்துள்ளார். தமிழர்களுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் வகையில், 13வது திருத்தத்துக்கும் அப்பாற்பட்ட தீர்வை தமது நாடு நடைமுறைப்படுத்தும் என்று சிறிலங்கா அதிபர் வாக்குறுதி அளித்துள்ளார் என்றும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விடயத்தில் இந்தியா விட்டுக் கொடுக்காது என்றும் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை மன்மோகன்சிங்குடனான சந்திப்பில் பங்கேற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரி வெளியிட்டுள்ளார். 1987ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ராஜீவ்- ஜே.ஆர் உடன்பாட்டுக்கு அமைய கொண்டு வரப்பட்ட 13வது திருத்தத்தில் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு 37 அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வழிசெய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

1 கருத்துக்கள் :

udaya kumar.t சொன்னது…

indiaarasaa rajivgandhi jeyavarthanai opatham yar yaruku?? singalavanukum singalavanukuma?? ethan palanai varum kalathil congress katchi anupavitha thirvendum!!