ஜனவரி மாதம் 13ம் திகதி ஊடகங்களால் மறைக்கப்பட்ட மற்றொரு கோரம்

4.2.13

டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் லும்பன் குழு ஒன்றால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு மரணமடைந்தது தெரிந்ததே. இக்கொடுமைக்கு எதிராக இந்திய ஊடகங்களும், டெல்லி மத்தியதரவர்க்கமும் மட்டுமல்ல பிபிசி, சனல் 4 போன்ற மேற்கு ஊடகங்களும் போர்க்கொடி உயர்த்தின.அதனைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம்: அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார். ஜனவரி மாதம் 13ம் திகதி ஊடகங்களால் மறைக்கப்பட்ட மற்றொரு கோரம் நடைபெற்றுள்ளது. டெல்லியில் கூலித்தொழில் செய்யும் தனது கணவனுடன் இணைந்துகொள்வதற்காக் தனது 10 வயது மகனுடனுடனும் இரண்டு உறவினர்களுடனும் 32 வயதான ஏழைப் பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்தப் பெண்ணை காடையர் கும்பல் ஒன்று டெல்லியில் இரண்டு புகையிரத நிலையங்களிடையே இறக்கி கூட்டாக பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிவிட்டு அரை நிர்வாணமாக மரம் ஒன்றில் தொங்கவிட்டுச் சென்றிருக்கிறது. பாலியல் வன்முறை, பாலியல் தாக்குதல் போன்றவை அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறை ஆயுதமாகப் பயன்படுத்தப்பகின்றது. அரசபடைகளின் வன்முறை ஆயுதமாகப் பயன்படுகிறது. ஏழைப்பெண் ஒருவர் ஏனையோர் முன்னிலையில் கடத்தப்பட்டு சிதைக்கபட்டு கொல்லப்பட்ட சம்பவம் இன்னும் ஊடகங்களின் உணர்வுகளையும், டெல்லி மத்தியதரவர்க்கத்தின் போர்குணத்தையும் தொட்டுப்பார்க்கவில்லை.

0 கருத்துக்கள் :