10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர்

6.2.13

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 10 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குடும்பஸ்தர் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். மூன்று தினங்களுக்கு முன் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் நேற்று கட்டுகஸ்தோட்டைப் பொலிஸாருக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்ட போது 31 வயதுடைய மேற்படி சந்தேக நபர் தலைமறைவாகி உள்ளதாகவும் அவரைத் தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

0 கருத்துக்கள் :