விடுதலைப்புலிகளை மீண்டும் பலம்பெற விடாதீர்கள்: ஐ.நாவிடம் மண்டியிடும் இலங்கை

17.1.13


விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உயிர்பெறக் கூடிய வகையில் எவ்வித ஆதரவினையும் வழங்கக் கூடாதென ஐ.நா பாதுகாப்புச் சபையிடம், சிறிலங்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறிலங்காவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான பாலித கொஹன வேண்கோள் …விடுத்துள்ளார். ஐ.நா பாதுகாப்புச் சபையின் புதிய ஆண்டுக்கான முதலாவது கூட்டம் நடைபெற்ற போதே இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத பலத்தினால் பெற முடியாது போனவற்றை மீண்டும் அவர்கள் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளும் எந்த முயற்சிக்கும் இடமளிக்கக் கூடாது. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் செயற்பாடுகள் தொடர்பில் சிறிலங்கா மிக அவதானத்துடன் உள்ளதாம் என பாலித கொஹன அங்கு தெரிவித்துள்ளா

0 கருத்துக்கள் :