தலைவர் பிரபாகரன் - நடிகர் கமல்ஹாசன் சுவரொட்டியால் திருச்சியில் பரபரப்பு!

9.1.13

இந்தியாவின் திருச்சி மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் தென்னிந்திய நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் இணைந்திருக்கும் படங்களைக் கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விரைவில் திரைக்கு வரவுள்ள நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளிவரவிருக்கும் “விஸ்வரூபம்” திரைப்படத்திற்கான சுவரொட்டிகளிலேயே இப் படமும் சேர்க்கப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டிகளில் நடிகர் கமல்ஹாசனை கலையுலக போராளி என வர்ணிக்கும் வாசகமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துக்கள் :