காவியுடை காட்டுமிராண்டித்தனத்தை தட்டிக்கேட்காத முஸ்லிம் தலைவர்கள் இருந்து என்ன பயன்?

26.1.13

காவியுடை காடையர்களின் காட்டுமிராண்டித்தனத்தை தட்டிக்கேட்காத முஸ்லிம் தலைவர்கள் இருந்து என்ன பயன் என மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது அன்மைக்காலமாக நாட்டில் நலா புரங்களிலும் புனித இஸ்லாத்திற்கும் அதனைப் பின்பற்றும் முஸ்லிம் சமூகத்திற்கும் எதிரான பௌத்த தீவிரவாதம் மிக மோசமாக தலைதூக்கியுள்ளது. அனுராதபுரம் சியாரம் உடைப்புடன் சில பௌத்த காவியுடை காடையர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட புனித இஸ்லாத்திற்கு எதிரான அடக்குமுறை இன்று பள்ளிவாயல்கள் உடைப்பு, பாங்கு சொல்வதற்கு தடை, தொழுகைக்கு தடை, முஸ்லிம் கிராமங்களிலிருந்து வெளியேற்றுதல், வியாபார நிலையங்களுக்கு சீல்வைத்தல், ஹலால் சான்றுதல்களை தடை செய்தல். என்று பட்டியல் நீண்டு கொண்டு செல்வதுடன் அதற்கு எதிரான போராட்டங்களும். ஆர்ப்பாட்டங்களும் தினம் தினம் படிப்படியாக விஸ்பரூபம் எடுத்துவருகின்றது. இவ்வாறு முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான திட்டமிட்ட போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் எந்தவொரு அரசின் ஆட்சிக் காலத்திலும் இடம்பெறவில்லை. கடந்த ஆட்சி காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கத்தில் குறைந்த எண்ணிக்கையிலான முஸ்லிம் பாராளமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்து முஸ்லிம்களினதும் புனித இஸ்லாத்தினதும் கன்னியத்தையும் கௌரவத்தையும் பாதுகாத்து வந்துள்ளனர். இன்றைய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் அதிகளவிலான பாராளமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஏன் முதலமைச்சர், ஆளுநர், மாகாண சபை உறுப்பினர்கள் என முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு பஞ்சமே இல்லை இவ்வாறான காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கும் புனித இஸ்லாத்திற்கும் எதிராக தலைவிரித்தாடும் மத அடக்கு முறையை தடுத்து நிறுத்தவோ அல்லது அதற்குகெதிராக குரல் கொடுக்கவோ எவருமில்லாத அரசியல் அனாதைகளாக இன்று முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது தேர்தல் காலங்களில் மூலை முடுக்குகளெல்லாம் மேடை போட்டு மேடைக்கு மேடை உரிமைகளை வென்றுதருவோம் என்று வீர முலக்கமிடும் கட்சிக்கரர்களாகவும், உரிமைகளோடு அபிவிருத்தியையும் பெற்றுத்தருவோம் என்று வரிந்து கட்டிக் கொண்டு முஸ்லிம் சமூகத்தின் வரலாறு கூறுவோர்களாகவும், ஆளும் கட்சியோடு சேர்ந்து இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும் என தனித்துவத்தை தாறுமாராக விமர்சனம் செய்பவர்களாகவும் தேர்தல் காலத்தில் முஸ்லிம்களை பரஸ்பரம் ஏமாற்றி வாக்குகளை பெற்றுக் கொண்டு அரசாங்கத்திற்கு பாராளமன்றத்தில் மூன்றில் இரண்டு பெறும்பான்மையை பெற்றுக் கொடுக்கும் நீங்கள் முஸ்லிம் சமூகம் பற்றியோ அல்லது படிப்படியாக பறிக்கப்பட்டு வரும் உரிமைகளைப்பற்றியோ சிந்திக்காமல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படும் சட்ட மூலங்களுக்கு கண்னை மூடிக் கொண்டு ஆதரவு வழங்கி தங்களது அமைச்சுப் பதவிகளை காப்பாற்றிக் கொள்கின்றவர்களாக இன்று முஸ்லிம் அரசியலை மாற்றியமைத்து விட்டீர்கள். இன்று தங்களுக்காக வாக்களித்த முஸ்லிம் சமூகத்தினதும் புனித இஸ்லாத்தினதும் அடையாளங்களும் உரிமைகளும் பௌத்த மத வெறியர்களினால் படிப்படியாக பறிக்கப்பட்டு வருகின்றது என்பதை மனச்சாட்சியோடு நீங்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும். இந்த முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைப் பொறுப்பை இறைவன் உங்களிடம் அமானிதமாக வழங்கியுள்ளான். தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தையும் பதவியையும் கொண்டு இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமன்றி அனைத்து சமூகத்திற்கும் இழைக்கப்படும் அநிதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதோடு அவர்களது உரிமைகளை வென்;றெடுப்பதில் அல்லாஹ_க்கு மாத்திரம் பயந்தவர்களாக செயற்பட வேண்டும் பதவிகளை பாதுகாத்துக் கொள்வதற்காக முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநிதிகளை தடுத்து நிறுத்துவதற்கோ அல்லது அதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கோ முதுகொலும்பு இல்லாத முஸ்லிம் தலைமைகளாக நீங்கள் இருப்பீர்களானால் நாளை இறைவனின் சன்னிதானத்தில் குற்றவாளிகளாக முழு சமூகத்திற்கும் அநீதி இழைத்தவர்களாக எழுப்பப்படுவீர்கள.; இன்று வரைக்கும் நீங்கள் பௌத்த கடும் போக்காளர்களினால் இஸ்லாத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட மத அடக்குமுறைக்கு எதிராக நீங்கள் மேற்கொண்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைதான் என்ன? ஜனாதிபதியுடன் பேசினோம் குழு அமைத்தோம் என்று கூறலாம் அது வெறும் கண்துடைப்பு இந்த நாட்டில் எங்கோ ஒரு மூலையில் சிறியதொரு அசம்பாவிதம் ஏற்பட்டாலும் அதனை உடனடியாக தகவல் அறிந்து கொள்ளும் வல்லமையுள்ள பாதுகாப்பு திறமையை கொண்டவர்களால் பகிரங்கமாக இஸ்லாத்திற்கு எதிராக போராட்டம் நடாத்துகின்றவர்களுக்கு பின்னால் யார் இருக்கின்றனர் என்று குழு அமைத்து கண்டு பிடிப்பதென்பது வேடிக்கையானது. அது மாத்திரமன்றி 30 வருடங்களாக இந்த நாட்டில் புரையோடிப் போயிருந்த உலகத்திலோ மிகப் பலம் வாய்ந்ததாக வர்னிக்கப்பட்ட புலிப் பயங்கரவாதத்தினை வெற்றி கொண்ட நிறைவேற்று அதிகாரத்தினை தன்னகத்தே கொண்ட ஜனாதிபதியும் எந்த சட்ட மூலத்தையும் பாராளமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் நிறைவேற்றும் சகல அதிகாரத்தினையும் கொண்ட அரசாங்கமும் இந்த நிராயுதபானியான பௌத்த கடும் போக்காளர்களை கட்டுப்படுத்த முடியாது என்பது நகைப்புக்குறியது நீங்கள் நினைத்தால் ஏன் முடியாது அரசியல் கட்சி ரீதியாக ஒன்றுபடாவிட்டாலும் அநீதிகளுக்காகவும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காகவும் ஒன்றுபட்டு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் பலமான அழுத்தங்களை கொடுங்கள் இல்லாவிட்டால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுங்கள் இந்த அரசாங்கத்தில் இருந்து முஸ்லிம் சமூகத்திற்காக நீங்கள் பெற்றுக் கொடுத்த உரிமைகளை விட இருந்தவைகளை இழந்ததே அதிகம் இன்னும் இழப்பதற்கு எதுவுமில்லை உங்களை அரியாசனம் ஏற்றிய இந்த முஸ்லிம் சமூகத்தின் உரிமைப் போராட்டத்திற்காக நீங்கள் உங்களது அமைச்சுப் பதவியை ஏன் துறக்க முடியாது? எனவே உங்களது மௌனம் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பௌத்த கடும்போக்காளர்களினால் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் நியாயமானது என ஏற்றுக் கொண்டதாகி விடும் உங்களது மௌனத்தை கலைந்து முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இன்று கட்டவிழ்து விடப்பட்டுள்ள அநிதிளுக்கு எதிராக குரல் கொடுத்து எமது சமூகத்தின் பாதுகாப்பையும் உரிமையையும் பெற்றுக் கொடுக்க அரசியல் கட்சி வேறுபாட்டிக்கு அப்பால் ஒன்றினைந்து செயற்படுமாறு அன்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன்

0 கருத்துக்கள் :