புத்த மடத்தில் புத்த துறவி தற்கொலை

6.1.13

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் எதிரே உள்ள சென்னத் லேன் பகுதியில் மகாபோதி சொசைட்டி என்ற பெயரில் புத்தமடம் உள்ளது. 100 ஆண்டு கால பழமையான இந்த மடத்தில் இலங்கையில் இருந்து வரும் புத்த துறவிகள் தங்குவது உண்டு. அவர்கள் தங்குவதற்காக 45 அறைகள் உள்ளது. அறையிலேயே சமைத்து சாப்பிடுவதற்கு வசதி உள்ளது. இங்குள்ள முதல் தளத்தில் பெங்களூரில் உள்ள புத்தமடத்தில் இருந்து வந்திருந்த ரத்தினபாலா (வயது 27) என்ற புத்த துறவி தங்கி இருந்தார். பீகாரில் உள்ள புத்த கயாவுக்கு செல்ல சென்னை வந்து தங்கிய அவர் இன்று (06,01,2013) காலை ரெயில் மூலம் பீகார் செல்ல திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று காலை ரத்தினபாலா தனது அறையில் உள்ள மின் விசிறியில் பிணமாக தொங்கினார். இடுப்பில் கட்டும் நாடா பெல்ட்டால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து மடத்தின் நிர்வாகத்துக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். எழும்பூர் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். ரத்தினபாலா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. அவரது செல்போனை கைப்பற்றிய போலீசார் கடைசியாக யார்- யாரிடம் பேசினார். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். ரத்னபாலாவின் சொந்த ஊர் காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியாகும். 10-ம் வகுப்பு வரை படித்த அவர் புத்த துறவியாக மாறினார். பெங்களூரில் நீண்ட காலம் தங்கி இருந்தார். ரத்னபாலா தற்கொலை குறித்து பெங்களூர் மடத்துக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 கருத்துக்கள் :