முருகனை நளினி மற்றும் உறவினர்கள் சந்திக்க தடை

4.1.13

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலை குற்றவாளி முருகன் மீது சிறைத்துறை நன்னடத்தை விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலூர் ஜெயிலில் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.1 1/2 லட்சம் பணம் செல்போன்கள், சிம்கார்டுகள் உள்ளிட்ட 13 வகையான தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி முருகன் அறையில் இருந்து சிம்கார்டு, மெமரிகார்டு, ஹெட்போன் சிக்கியது. தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தியது தொடர்பாக முருகன் மீது சிறைதுறை நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முருகன் பெண்கள் ஜெயிலில் இருக்கும் அவரது மனைவி நளினியை சந்திக்க தடை செய்யப்பட்டது. கடைசியாக நவம்பர் 24-ந்தேதி நளினி- முருகன் சந்திப்பு நடந்தது. மேலும் முருகனை உறவினர்கள் பார்வையாளர்கள் சந்திக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :