ஓடும் ரயிலில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி : ராணுவ வீரர் கைது

4.1.13

அசாம் மாநிலத்தில் இருந்து டெல்லியை நோக்கி பிரம்ம புத்திரா எக்ஸ்பிரஸ் சென்று கொண்டு இருந்தது. டார்ஜிலிங் ரயில் நிலையத்தில் 30 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் ஏறினார். அவர் தெரியாமல் முதல் வகுப்பு பெட்டியில் ஏறி விட்டார். ரயில் சென்று கொண்டு இருந்த போது 2 ராணுவ வீரர்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று ள்ளனர். இதனால் அவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்தார். இதனால் அவர் படுகாயம் அடைந்தார். அசாம் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கற்பழிப்பு முயற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர் ரமேஷ் குமாரை கைது செய்தனர். அவரது நண்பரை தேடி வருகின்றனர்.

0 கருத்துக்கள் :