"ஈடு இணையற்ற வீரர்களுக்கு எல்லாம் வீரர் பிரபாகரன்" (காணொளி)

23.1.13


சென்னையில் நடைபெற்று வரும் மாபெரும் புத்தகக் காட்சி நாளை நிறைவுக்கு வருகின்ற இந்நிலையில் இன்று வைகோ அவர்கள் சென்னை புத்தக காட்சியில் உரையாற்றினார். இந்தியாவில் நடந்த கொடுமைகளைச் சித்தரிக்கலாம். ஆனால் ஓராயிரம் கொடுமைகள் அல்லவா ஈழத்தில் நடந்து விட்டது.

எத்தனை எத்தனை புதைகுழிகள் ஈழத்திலே, எத்தனை எத்தனை பிள்ளைகள் அந்த மண்ணுக்குள், எத்தனை பனித்துளிகள் மண்ணுக்குள் இது தை மாதமல்லாவா, குளிர்வாட்டும் மாதமல்லாவா, மான்னாரிலே கிளிநொச்சியிலே மட்ட்டக்களப்பிலே வல்வெட்டித்துறையிலே யாழ்ப்பாணத்திலே முள்ளிவாய்க்காளிலே ஆனந்தபுரத்திலே லட்ச்சக்கணகான மக்கள் கொல்லப்பட்டார்களே அந்த புதைகுழியின் மீது பனித்துளிகள் விழும் போது எமது நெஞ்சம் கனக்கிறதே.
ஆகஸ்ட் 4! சுதுமலையில்...! தமிழனுக்கு தரணியில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த ஈடு இணையற்ற வீரர்களுக்கெல்லாம் வீரர் திலகமான பிரபாகரன் சொன்னார்....., இந்தசிங்கள இனவாத பூதம் ஒப்பந்தத்தை விழுங்கிவிடும் என்று பிரபாகரன் சொன்னார். அங்கு வைகோ ஆற்றிய உரையின் சிறுதொகுதி....

0 கருத்துக்கள் :