நடிகை திரிஷா மீது போலீசில் புகார்

24.1.13

'சமர்'படத்தில் திரிஷா மது அருந்துவது போல் காட்சிகள் உள்ளன. இதுபற்றி அவரிடம் கேட்டபோது நான் மது அருந்துவது போல் சீன்கள் இடம் பெற்ற படங்கள் ஹிட்டாகியுள்ளன. எனவே 'சமர்' படத்திலும் அக்காட்சி இருக்க வேண்டும் என்பதற்காக மது அருந்துவது போல் நடித்தேன் என்றார். பெண்கள் மது குடிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது அது அவரவர் விருப்பம் என்று பதில் அளித்தார். திரிஷாவின் இந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள் ளன. தமிழ் கலாசாரத்துக்கு எதிராக அவர் பேசி உள்ளதாக கண்டனம் எழுந்துள்ளது. அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். பேசிய தை வாபஸ் பெற வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டன. இந்நிலையில் பா.ம.க. சட்ட பாதுகாப்பு குழு மாநில துணை செயலாளர் வக்கீல் ஜானகிராமன் திரிஷா மீது ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரில் மது அருந்தும் காட்சிக்கு வருத்தம் தெரிவிக்க மறுப்பு தெரிவித்த நடிகை திரிஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துக்கள் :