திருப்பதி எழுமலையானைச தரிசிக்க செல்லும் மகிந்தர்!

31.1.13


இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏற்கனவே 2 முறை சென்று தரிசனம் செய்து உள்ளார். ஏழுமலையானை தரிசிப்பதால் மனதில் நிம்மதி கிடைக்கிறது என்று அப்போது அவர் தெரிவித்தார். தற்போது 3-வது முறையாக ராஜபக்ஷ எதிர்வரும் 8-ம் திகதி திருப்பதி செல்கிறார். கொழும்பில் இருந்து தனி விமானம் மூலம் பீகார் செல்கிறார். அங்கு புத்த கயாவில் வழிபாடு நடத்தி விட்டு அதே விமானத்தில் ஆந்திர மாநிலம் ரேணி குண்டா செல்கிறார். பின்னர் கார் மூலம் திருமலை செல்கிறார். அங்கு ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு கொழும்பு திரும்புகிறார். மஹிந்த ராஜபக்ஷ வருகையையொட்டி திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (30) திருமலை சென்று தேவஸ்தான அதிகாரி ஸ்ரீனிவாசராவ், பொலிஸ் சூப்பிரண்டு சுப்புராமரெட்டி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இலங்கை ஜனாதிபதியின் தரிசன நேரம், மற்றும் பாதுகாப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவில் பாதுகாப்புக்கு 200-க்கும் மேற்பட்ட கமராக்கள் பொருத்தப்படுவது போல திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும் நவீன கேமிராக்கள் பொருத்தப்படுகிறது. இது குறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கோவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். பழைய கமராக்களை ஆய்வு சென்ற அவர்கள் அதற்கு பதிலாக நவீன தொழில்நுட்ப கமரா பொருத்த அறிவுரை வழங்கினார்கள்.

0 கருத்துக்கள் :