முடிவை கமல் கைவிட வேண்டும் : ரஜினி, விஜயகாந்த் வேண்டுகோள்

30.1.13

விஸ்வரூபம் பிரச்சனையில் தமிழக அரசின் அணுகுமுறைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தை விட்டு வெளியேறும் எண்ணத்தை கமல் கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து ள்ளார். தமிழகத்தை விட்டே தாம் வெளியேற தயார் என கமல் கூறியது மனத்தை ரணமாக் கிவிட்டது. கலைத்துரைக்கு தன்னை அர்ப்பணித்து விட்ட கமலை அரசு புண்படுத்தியுள்ளது. உணர்ச்சிகரமான பிரச்சனையில் இரண்டு தரப்பையும் அழைத்து பேசியிருக்க வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து கமல் மீண்டு வருவார் என்று விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த், கமலை தொலைபேசியில் தொடர்புகொண்டு விஸ்வரூபம் பிரச்சனையில் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் முடிவை கைவிட வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, இயக்குநர்கள் பாரதிராஜா, மணி ரத்னம், கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் சிவகுமார், அரவிந்த சாமி, கார்த்தி, சூர்யா, சிம்பு, நடிகை ராதிகா, சினேகா உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் கமல் வீட்டிற்கு வந்து அவருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். தமிழகத்தை விட்டு வெளியேறும் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். நடிகர் அர்ஜூ னும் வலியுறுத்தினார். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கமல் ரசிகர்கள் திரண்டு வந்து கமலுக்கு ஆதரவாக அவர் வீட்டு முன் நின்று குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ---விஸ்வரூபத்தில் கதக் நடனம் உருவான விதம் (வீடியோ இணைப்பு)-- நல்லவற்றை நியாய முறையில் துணிந்து சொல்பவர்களை இந்த உலகமும் சரி ஊரும் சரி இழந்த பின்னரே புரிந்து கொள்கின்றனர் இது நடிகர் கமலுக்கும் பொருந்தும்

0 கருத்துக்கள் :