சுவிஸில் அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம்

24.1.13

சுவிசில் அகதித்தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பபடலாம் என்ற அச்சம் நீடித்தவரும் நிலையில் இவ்விவகாரத்தினை எதிர்கொள்வதற்கான அகதிதஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கான ஒருங்கிணைவுக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை மாலை 3.30மணிக்கு பேர்ண் நகரில் உள்ள எவ்.ஐ.எம்.எம். மண்டபத்தில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதேவேளை சுவிசில் அகதிதஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் தொடர்பாக சுவிஸ் அரசின் அகதிகள் விவகாரங்களுக்கான திணைக்களத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சின் சர்வதேச வழக்கறிஞர் டேவிட் மேத்தா பேச்சுக்களை இவ்வார இறுதியில் மேற்கொள்ள இருக்கின்றார்.

வழக்கறிஞர் டேவிட் மேத்தா புலம்பெயர் நாடுகள் உட்பட சர்வதேச அளவில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள தமிழ் அகதிகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையத்துடனும் பேச்சுவாத்தைகளை நடத்த இருக்கின்றார்.

0 கருத்துக்கள் :