ஒன்றரை வயது குழந்தையை கொன்ற தந்தை தற்கொலை!

5.1.13

ஒன்றரை வயது நிரம்பிய தனது பிஞ்சுக் குழந்தையை மூர்க்கமாக தாக்கி கொலை செய்து பின்னர் தலைமறைவாகியிருந்த அதன் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பிலியந்தலவில் அமைந்துள்ள தனது வீட்டில் வைத்து நேற்றிரவு மேற்படி நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட தகராரையடுத்தே குறித்த நபர் தனது குழந்தையை துன்புறுத்திக் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டாவது மனைவிக்கு பிறந்த குழந்தையே அந்நபர் கொலைசெய்துள்ளார். இதேவேளை குழந்தையின் தாயை சில வருடங்களுக்கு முன்னர் தற்கொலைசெய்து கொண்ட நபர் வல்லுறவுக்குட்படுத்தியதாகவும் இதனையடுத்தே அவரை திருமணம் செய்துகொண்டதாகவும் தெரியவருகின்றது.

0 கருத்துக்கள் :