புதுவையில் – இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மூவர் பலி

22.1.13

புதுவை அருகே உள்ள கோட்டக்குப்பத்தை அடுத்துள்ளது அனுச்சை குப்பம். தமிழக பகுதியான இங்கு இலங்கை அகதிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அஜன் (வயது 21), சாருஷாஜன் (20) ஆகியோர் தங்கியிருந்தனர். இந்த ஊருக்கு அருகே உள்ள நம்பிக்கை நல்லூரை சேர்ந்தவர் சதீஷ் (24). இவர்கள் 3 பேரும் கட்டிட தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் தினமும் புதுவைக்கு வந்து கட்டிட தொழில் செய்து விட்டு மாலையில் வீடு திரும்புவார்கள். நேற்று அதேபோல் பணிமுடிந்து மாலையில் ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேரும் திரும்பினார்கள். அனுக்சை குப்பம் அருகே சென்றபோது எதிரே சென்னையில் இருந்து ரசாயன பொருள் டேங்கர் லொரி ஒன்று வந்தது. அந்த லொரி அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அஜன், சாருஷாஜன் 2 பேரும் கனக செட்டிக்குளத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். சதீஷ் ஜிப்மர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். 3 பேருமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது தொடர்பாக கோட்டக்குப்பம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்துக்கள் :