புலம்பெயர் தமிழர்கள் செய்திகளை உடன் அறிய மகிந்தா ஸ்கைப்பில்

2.1.13


வெளிநாடுகளில் இயங்கிவரும் இலங்கைத் தூதரங்களோடு, பேஃக்ஸ்சில் மட்டும் தொடர்பாடல்களைப் பேணிவந்த ஜனாதிபதி மாளிகை, தற்போது ஸ்கைப் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மன், கனடா மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரங்கள்… தற்போது மகிந்தரின் ஸ்கைப் ஐ.டியோடு இணைக்கப்பட்டுள்ளதாம். இதனால் குறிப்பிட்ட நாடுகளில் உள்ள தூதுவர்களோடு மகிந்தர் நேரடியாகப் பேச முடியும் என்றும் கூறப்படுகிறது. வீடியோ மற்றும் உரையாடல் மூலமாக அந்தந்த நாடுகளில் என்ன நடக்கிறது என்பதனை, உடனுக்குடன் அறிய மகிந்தர் தற்போது லாப்டொப்பும் கையுமாக அலைகிறார். மகிந்த ராஜபக்ஷ தற்போது ஸ்கைப் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள நாடுகளில், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்கிறார்கள். எனவே தமிழர்கள் நடத்தும் போராட்டங்கள் , அரசியல் நகர்வுகள் என்பனவற்றை, மகிந்தர் இனி உடனுக்குடன் அறிவார் என்றும் சொல்லப்படுகிறது. தற்செயலாக இவரது ஸ்கைப் ஐ.டி லீக் ஆனால், என்ன ஆகுமோ தெரியவில்லை. சும்மா விடுவார்களா தமிழர்கள் ? அடித்து திட்டி தீர்த்துவிடுவார்கள் அல்லவா ?

0 கருத்துக்கள் :