பத்து லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும்”: யாழில் சுவரொட்டிகள்

15.1.13


தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டது சம்பந்தமாக தகவல் தருபவர்களுக்கு பத்து லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என சுவரொட்டிகள் யாழ். மாவட்டத்தின் பல பாகங்களிலும் பொலிசாரினால் ஒட்டப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பலாலி வீதி காப்பற் போடும் பணியில் ஈடுபட்ட தென்னிலங்கை இளைஞர் ஒருவர் நந்தாவில் தோட்டவெளியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தக் கொலையைத் தொடர்ந்து கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழுவினர் புன்னாலைக்கட்டுவனில் ஒரு இளம் குடும்பத்தினரை கடத்திச் சென்று விசாரணைகளை மேற் கொண்டதுடன் அவர்களுடைய தந்தையையும், சகோதரனையும் கைது செய்து விசாரனைகளையும் மேற் கொண்டார்கள். இந்நிலையில் திருநெல்வேலிப் பகுதயில் உள்ள சுமார் ஏழு பேரை விசாரணை செய்த நிலையில் தற்போது கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் பற்றிய விபரங்களை தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்ற சுவரொட்டிகளை பொலிஸார் யாழ். மாவட்டத்தில் ஒட்டியுள்ளார்கள்.

0 கருத்துக்கள் :