பிரபல இந்தி நடிகை பூஜா பட்டுக்கு செல்போனில் கொலை மிரட்டல்

12.1.13

பிரபல இந்தி நடிகை பூஜா பட்டுக்கு செல்போனில் கொலை மிரட்டல் வந்துள்ளது. போனில் பேசிய மர்ம ஆசாமி யார் என்று தெரிய வில்லை. மிரட்டலால் பூஜாபட் அதிர்ச்சியாகியுள்ளார். இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். மிரட்டியவரின் செல்போன் நம்பரையும் போலீசாரிடம் எழுதி கொடுத்துள்ளார். இது குறித்து பூஜாபட், ‘’ என் செல்போனில் மர்ம ஆசாமி ஒருவன் பேசினான். கேவலமாக என்னை திட்டினான். மிரட்டவும் செய்தான். அவன் யார் என்று தெரிய வில்லை. திட்டி தீர்த்த பிறகு போனை துண்டித்து விட்டான். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். மிரட்டல் விடுத்தவனின் போன் நம்பர் என் செல்போனில் பதிவாகி இருந்தது. உடனடியாக இது குறித்து போலீசில் புகார் செய்தேன்’’ என்றார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.

0 கருத்துக்கள் :