இழுத்தடிக்கும் நவநீதம்பிள்ளை சிறிலங்கா அரசாங்கம் கவலை

10.1.13

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சிறிலங்காவுக்கான பயணம் கேள்விக்குறியாகவே இருப்பது சிறிலங்கா அரசாங்கத்துக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வரும் மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது கூட்டத் தொடருக்கு முன்னதாக, சிறிலங்காவின் நிலைமைகளை நேரில் கண்டறியவுள்ளதாக அவர் கூறியிருந்தார்.

எனினும் அவர் சிறிலங்காவுக்கான பயணத்தை இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.

இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்,

“போருக்குப் பின்னரான நிலைமையை மதிப்பிடுவதற்கு சிறிலங்கா வருமாறு சிறிலங்கா அரசாங்கம் விடுத்த அழைப்புக்கு, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்னமும் எந்தப் பதிலையும் அளிக்கவில்லை.

தனது பயணத்துக்கு முன்னோடியாக இடம்பெற வேண்டும் என்று நவநீதம்பிள்ளை விதித்த இரண்டு நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டு விட்ட போதிலும் அவர் தனது வருகையை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு முன்னர், நாம் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தோம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு, தனது பணியகத்தைச் சேர்ந்த குழுவினரின் முதற்கட்ட பயணம் இடம்பெற்ற பின்னரே தான் சிறிலங்கா வருவதாக நவநீதம்பிள்ளை கூறியிருந்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த 2011இல் வெளியிடப்பட்டு விட்டது.

கடந்த செப்ரெம்பரில் ஜெனிவாவில் இருந்து வந்த குழு நிலைமைகளை பார்த்து விட்டுப் போனது.

எனினும் சிறிலங்கா வருவதற்கான தனது விருப்பத்தை நவநீதம்பிள்ளை இன்னமும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு தெரிவிக்கவில்லை.

சிறிலங்காவுக்கு வந்து நிலைமைகளை நேரில் பார்க்கும்படி

0 கருத்துக்கள் :