தாயின் கல்லறைக்கு கார்த்திகை பூ வைத்த இளைஞனை இராணுவ புலனாய்வு துறை விசாரணை.!

1.1.13


சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, கடந்த 26ம் திகதி வடமராட்சி கிழக்கில் சுனாமி அனர்த்த நிகழ்வு கொண்டாடப்பட்டது. அப்போது பலர் தமது உறவுகளின் கல்லறைக்கு பூக்களை வைத்து அஞ்சலி செய்தனர். இது மார்கழி மாதம் என்பதாலும் இப்பகுதியில் பூக்கள் கிடைப்பது குறைவு என்பதாலும் மக்கள் பலர் கார்த்திகை பூவை வைத்து அஞ்சலி செய்தனர். இதன்போது சுனாமி துயிலுமில்லத்தினுள் நுழைந்த இராணுவ புலனாய்வாளர்கள் கார்த்திகை பூ வைத்த அனைத்து தமிழ் உறவுகளையும் அந்த இடத்தில் வைத்தே விசாரணை செய்துள்ளனர். இது மட்டுமல்லாமல் பலரை தொடர்ந்தும் விசாரணை செய்தும் அடிக்கடி தமது அலுவலகத்துக்கு வரும்படியும் கூறுகின்றனர். இதில் வேதனை என்னவென்றால் சுனாமியில் தனது தாய், சகோதரிகள் மற்றும் பல உறவுகளை இழந்த ஒரு இளைஞன் அந்த கல்லறையின் மீது அலுத்து புலம்பிக் கொண்டிருந்த போதும் புலனாய்வாளர்கள் இரண்டு மணித்தியாலமாக விசாரணை செய்துள்ளனர். உறவுகளே ஈழத்தில் எமது உறவுகள் படும்வேதனையை ஒருமுறை இந்த உலகுக்கு எல்லோரும் ஒருமித்த குரலில் சொல்லுங்கள் நாம் நின்மதியாக வாழலாம். தமிழ் ஈழத்தில் இருந்து வேந்தன்.

0 கருத்துக்கள் :