கேணல் சாள்ஸ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

5.1.13

மன்னாரில் காவியமான விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ்(அருள்வேந்தன்) உட்பட்ட நான்கு மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
 05.01.2008 அன்று மன்னார் மாவட்டம் பள்ளமடுப்பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில், படைய புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (சண்முகநாதன் ரவிசங்கர் யாழ்ப்பாணம்)
 லெப்டினன்ட் சுகந்தன் (சிவபாலன் கிரிதரன் - கிளிநொச்சி)
லெப்டினன்ட் காவலன் (சின்னத்தம்பி கங்காதரன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வீரமாறன் (பரராஜசிங்கம் சுதன் - முல்லைத்தீவு)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
 தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.

0 கருத்துக்கள் :