விஸ்வரூபம் திரையிடுவது தொடர்பில் 3 நாட்களில் தீர்மானம்

31.1.13

விஸ்வரூபம் திரைப்படத்தை இலங்கையில் திரையிடுவது தொடர்பில் இன்னும் மூன்று நாட்களில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தீவிரமாக ஆராய்வதாகவும் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவின் நிலைமை குறித்து நாம் மிக அவதானமாக இருக்கின்றோம். அதேநேரம் நாம் அவதானம் செலுத்தினாலும் எமது தீர்மானம் சுயாதீனமாகவே இருக்கும். இதேவேளை, இத் திரைப்படத்தை நான் பார்த்தேன். இருந்தாலும் இதனை மக்கள் பார்த்து விமர்சனம் செய்வது சிறந்ததாக இருக்கும் என தான் தனிப்பட்ட ரீதியில் கருதுகின்றேன் என்றார்.

0 கருத்துக்கள் :