20.01.2013 லண்டனில் ”ராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம்” புத்தகம் வெளியீடு...

15.1.13

தமிழகத்தில் திருச்சி வேலுச்சாமி அவர்களால் பல இன்னல்களுக்கு மத்தியில் வெளிக்கொண்டுவந்த புத்தகமான ராஜீவ் படுகொலை தூக்கு கயிற்றில் நிஜம்” புத்தகம் 20.01.2013 ஞாயிற்றுக்கிழமை லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள 338 London Road, Mitcham, London CR4 3UD எனும் முகவரியில் வெளியிடப்பட உள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க பல புலம்பெயர் முக்கியஸ்தர்கள், ஊடகவியளாலர்கள்,ஆய்வாளர்கள் என பலர் கலந்துகொண்டு இப்புத்தகத்தைப் பற்றி உரையாற்ற உள்ளார்கள். புலம்பெயர் ஊடகவியலாளர்கள் புத்தகத்தை வெளியிட புலம்பெயர் மக்கள் பெற்றுக்கொள்ள இருக்கின்றார்கள். செய்யாத குற்றத்திற்காக தூக்கிலிடப்பட இருந்த அப்பாவி தமிழர்களை தன்னுடைய அசுரத்தனமான துணிச்சலால் பல முறை தூக்கு கயிற்றில் இருந்து காப்பாற்ற காரணமாக இருந்தவர் திருச்சி வேலுச்சாமி அவர்கள். தமிழர்களின் விடிவிற்கு இப்புத்தகமும் கண்டிப்பாக வலுச்சேர்க்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்திகழ்வுக்கு இச்செய்தியை அழைப்பிதழாக ஏற்று பிரித்தானியா வாழ் மக்கள் கலந்து கொள்ளுமாறு உரிமையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

0 கருத்துக்கள் :