மாணவிகள் குட்டைப் பாவாடை பாலியல் தொந்தரவுகள் அதிகரிக்கிறது

29.12.12

டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சிறுமிகளை பலாத்காரம் சமூகச் சீர்கேடுகள் பெருகி வருகிறது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து ஓங்கி ஒலிக்கிறது. அதேசமயம், இதுபோன்ற பாலியல் சீண்டல்கள் எந்த சூழ்நிலையில் ஏற்படுகிறது என்பதையும் ஆராய வேண்டியிருக்கிறது. அந்த வகையில், பள்ளிகளில் மாணவிகள் குட்டைப் பாவாடையை சீருடையாக அணிந்து வருவது, பாலியல் தொந்தரவு வழக்குகள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது என்று ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. பன்வாரி லால் சிங்கால் கருத்து தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் மாநில தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில், ‘ஆழ்வார் நகரில் உள்ள பல இடங்களில் மாணவிகள் பள்ளிக்கு நடந்து செல்கின்றனர் அல்லது பள்ளி பேருந்துகளுக்காக காத்திருக்கின்றனர். அப்போது குறும்பு மற்றும் கேலிப்பேச்சுக்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நகரின் பல தனியார் பள்ளிகளில் குட்டைப் பாவா டைகளே சீருடையாக உள்ளன. பெண்களுக்கு எதிரான சமூக குற்றங்கள் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, இத்தகைய சீருடைகள் தடை செய்யப்பட வேண்டும். அதற்குப் பதிலாக மாணவிகளுக்கு சல்வார் கமிஸ், பேண்ட்-சட்டைகளை சீருடையாக வழங்க வேண்டும். இது தீவிர சீதோஷ்ண நிலையில் இருந்தும் மாணவிகளை பாதுகாக்கும்’ என்று கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :