நல்ல குற்றவாளி கோர்ட்டில் கதறல் என்னை தூக்கிலிடுங்கள்

19.12.12

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓடும் பஸ்ஸில் மாணவியை பலாத்காரம் செய்த குற்றவாளிகளில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். நான் மன்னிக்க முடியாத குற்றம் செய்துவின்டேன். அதற்காக நான் தூக்கிலிடப்பட வேண்டும் என்று அதில் ஓரு குற்றவாளி தெரிவித்தான். கொடுமையான குற்றம் செய்துவிட்டதாகவும் கூறினான். இதையடுத்து இவ்வழக்கு தொடர்பான அறிக்கையை போலீஸ் கமிஷனர் இரண்டு நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். டெல்லி முழுவதும் உள்ள பாலியல் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக 5 விரைவு நீதிமன்றங்கள் அமைப்பதற்கும் கோர்ட் அனுமதி அளித்தது.

0 கருத்துக்கள் :