கிளிநொச்சி பகுதிகளில் அதிகரித்துள்ள சட்டவிரோத மதுவும் சமூக சீர்கேடுகளும்

8.12.12


கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோத மதுபான உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்துக் காணப்படுவதுடன் சமூக சீர்கேடுகளும் இடம்பெற்று வருகின்றன என்று சமூக ஆர்வலர்கள் கவலையும் விசனமும் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி, பரந்தன், கோரக்கன்கட்டு, பூங்காவனச்சந்தி ஆகிய இடங்களில் சட்டவிரோத மதுபான உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்துக் காணப்படுவதுடன் சமூக சீர்கேடுகளும் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றது. பரந்தன் பகுதியில் ஏ35 வீதியை மையமாகக் கொண்ட பூங்காவனச்சந்தி, கோரக்கன்கட்டு ஆகிய பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் கசிப்பு விற்பனை இடம்பெற்று வருகின்றது. இது நடமாடும் வியாபாரமாகவும் இடம்பெறுவதுடன் குறிப்பிட்ட சில வர்த்தக நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனைவிட மாலை 6 மணிக்குப் பின்னர் வீதியால் பயணிக்கும் பலரும் வயது வேறுபாடுகளின்றி மதுபோதையில் தள்ளாடித் திரிவதைக் காணமுடிகின்றது. அத்துடன் பல்வேறு சீர்கேடுகளும் இடம்பெற்று வருகின்றன. இதில் உரிய அதிகாரிகள் கவனமெடுத்து இவ்வாறான சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துக்கள் :