யார் குற்றம் செய்தாலும் தண்டனை கிடைக்குமாம்

7.12.12

நாட்டில் சகலருக்கும் சட்டம் சமனானது யார் குற்றம் செய்திருந்தாலும் தண்டனை கிடைக்கும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நான் பழிவாங்கும் மனிதர் அல்ல. உயர்மட்டத்தில் இருந்தால் என்ன, கீழ் மட்டத்தில் இருந்தால் என்ன அன்று ஜனாதிபதி ஒருவரின் ஊழல் மோசடிக்குறித்து எதிர்க்கட்சி கோஷம் எழுப்பியது. அத்துடன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு ஓடியது. அவரின் தராதரம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றது. இன்று சட்டத்திற்கு அமைய,அரசியலமைப்பிற்கு அமைவாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது அரசாங்கத்திற்கு எதிரான குற்றங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் தலைசாய்க்காது. சட்டத்திற்கு அமைவாக சகல விடயங்களும் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :