செய்த குற்றங்களை மறைக்க பிரபாகரன் பெயரைத் தூக்கும் அரசு; மனோ கணேசன்

6.12.12

தாம் இழைக்கும் அனைத்துக் குற்றங்களையும் மூடி மறைக்க பிரபாகரன் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் முத்திரையை எல்லாவற்றின் மீதும் அரசு குத்துகின்றது என்றும் நாட்டில் இனவாதத் தீயைக் கொழுந்து விட்டு எரியச் செய்வதற்காகவே அரசு இதுபோன்ற பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது என்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டினார்.

தமிழர்களின் உரிமைகள் வழங்கப்படும்வரை வடக்கு, கிழக்கில் சமாதானத்தை நிலைநிறுத்த முடியாது என அவர் தெளிவுபடுத்தி உள்ளார். தமது உரிமைகளைப் பெறுவதற்காக ஜனநாயக வரையறைக்குள் தமிழர்கள் நடத்தும் போராட்டங்களை முடக்கி, மீண்டும் ஆயுத கலாசாரத்திற்கு அரசு வித்திடுகின்றதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தெற்கு மக்களுக்கு கொடுக் கப்படும் உரிமைகள் வடக்கு மக்களுக்குக் கொடுக்கப் படாவிட்டால் வடக்கு, தெற்கு வெவ்வேறு நாடாகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித் ததாவது:

பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க நேற்று (நேற்றுமுன்தினம்) தெரிவுக்குழு விசாரணைகளுக்காக நாடாளுமன்றத் திற்குச் சென்றார். அந்த நேரத்தில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவதற் காக அமைச்சர் மேர்வின் சில்வா பெருந்தொகையான மக்களை அழைத்து வந்திருந்தார்.

பிரபாகரன் மீது பொய்க் குற்றச்சாட்டு

பிரபாகரனால் கிளிநொச்சியில் செய்யமுடியாது போனதை புதுக்கடையில் செய்து முடிக்கத்தான் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவுடன் நாடாளுமன்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டிருந்தார். இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுக்களாகும்.

தாம் இழைக்கும் தவறுகளை மூடிமறைப்பதற்காக பிரபாகரன், புலம்பெயர் தமிழர்கள் ஆகியோர் மீது அரசு பொய்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறது. புலம் பெயர் தமிழர்களிடமுள்ள பணம் அனைத்தையும் பெற்றுக் கொண்டு அவர்களையும் தம்முடன் வைத்துக் கொண்டுதான் அரசு செயற்படுகின்றது.

பிரபாகரனின் முத்திரையைக் குத்தி நாட்டில் இனவாதத் தீயைக் கொழுந்து விட்டு எரியச் செய்வதற்கு அரசு முயற்சிக்கின்றது. என்றார்.

0 கருத்துக்கள் :