காலண்டர் வாங்கினால்தான் கோயிலுக்குள் அனுமதிப்போம்

26.12.12

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் 2013ம் ஆண்டுக்கான மாத காலண்டர் ஆயிரக்கணக்கில் அச்சடித்துள்ளனர். ஒரு காலண்டரின் விலை 60 ரூபாய் என விற்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக திருவண்ணாமலை கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் காலண்டர் வாங்கினால்தான் கோயிலுக்குள் அனுமதிப்போம் என கெடுபிடி காட்டி வருவதாக புகார்கள் பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 25.12.2012 அன்று மாலை பிரதோஷத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்திருந்தனர் எனவும், சாமி தரிசனம் செல்லும் போது இலவச தரிசனத்தை நிறுத்தியவர்கள் சிறப்பு தரிசனம் வழியாக மட்டுமே பக்தர்களை அனுமதித்தனர் என்றும், தரிசன கட்டணத்தோடு காலண்டருக்கான தொகையையும் வாங்கிக்கொண்டு உள்ளே அனுப்பினர் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல் சிறப்பு பூஜை செய்பவர்கள், சங்கு அபிஷேகம் செய்பவர்களிடம் நூறு காலண்டர், 200 காலண்டர் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துபவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. கோவில் நிர்வாகத்தினரின் இந்த செயல் பக்தர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது,