யாழ் .சாவகச்சேரி நகர் பகுதியில் மதுப்பிரியர்கள் அடாவடி

5.12.12


சாவகச்சேரி நகர்ப் பகுதியில் உள்ள வீதிகளில் மாலை வேளைகளில் மதுப்பிரியர்களின் அடாவடிச் செயற்பாடுகளால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக முறையிடப்பட்டுள்ளது. தினமும் மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணிவரை நகரை அண்டிய வீதிகளில் உள்ள வெற்றுக் காணிகளிலும் வீதியோரங்களிலும் காணப்படும் இளைஞர் கூட்டம் அவ்வழியே செல்லும் மாணவிகள், யுவதிகள், முதியோர்கள் போன்றவர்களைத் தகாத வார்த்தைகளால் ஏசுவதாகவும், இதனைத் தட்டிக் கேட்க முனைபவர்களைக் கூட்டமாக நிற்கும் இளைஞர்கள் தாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கடந்தவாரம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள வீதியிலும், இரு குளங்களிலும் அட்டகாசம் புரிந்த இளைஞர்கள் அவ்வழியே சைக்கிளில் வந்த முதியோர்களைத் தாக்கித் தள்ளி வீழ்த்தியதில் காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த இளைஞர் கும்பலுடன் இணைந்துள்ள 21 வயதுக்கு மேற்பட்ட சிலர் பொதுமக்களுக்கு இடைஞ்சல் தருவதாகவும், இது தொடர்பாக பொலிஸார் மாலை வேளைகளில் ரோந்து சேவையை ஆரம்பிக்குமாறும் குறிப்பாக வைத்தியசாலைக்கு அருகிலுள்ள காளிகோயில் வீதி, அருகில் உள்ள ஆலயக்குளம், மதுபானநிலையத்துக்கு பின்புறம் உள்ள ரயில்பாதை ஆகியவற்றில் அவசியம் மாலை 6 மணிவரை ரோந்து சேவையில் ஈடுபட வேண்டுமெனவும் முறையிட்டுள்ளனர்.

0 கருத்துக்கள் :