பாகிஸ்தானில் ஆறு வயதான இந்து சிறுமி மீது பாலியல் வல்லுறவு!

18.12.12

பாகிஸ்தான் சிந்து மாணத்தில் உமர்கொட் பகுதியில் 6 வயதான இந்து சிறுமியொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த வேளையில் அப்பகுதியில் சூதாட்ட விடுதியொன்றை வைத்திருக்கும் நபரொருவர் அவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். இச்சம்பவமானது இம் மாதம் 3 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. எனினும் இச்சம்பவம் இடம்பெற்று சுமார் 10 நாட்களின் பின்னரே சிறுமி கராச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்தே இது தொடர்பில் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. சிறுமி கும்பலொன்றால் கூட்டாக வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பல சமூக அமைப்புகள் சிறுமியை வைத்தியசாலையில் வைத்து சந்தித்துள்ளதாக தெரியவருகின்றது. பாகிஸ்தானில் தேர்தல் வரவுள்ள நிலையில் ஆளும் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி இந்த சம்பவத்தில் அக்கறை காட்டத் துவங்கியுள்ளார். மனித தன்மையற்ற இந்த கொடும்செயலை செய்த குற்றவாளிகளை நீதிமன்றம் முன் நிறுத்த அறிவுறுத்தியுள்ளார்.

0 கருத்துக்கள் :