சிங்கள அரசின் சதிவலையில் சிக்காது விழிப்புடன் இருப்போம்! தமிழீழ விடுதலைப் புலிகள்

6.12.12

எமது விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்குச் சிங்கள அரசு தன்னாலான அனைத்து முயற்சிகளிலும் இறங்கியுள்ளது. நாம் எமது மக்கள் மத்தியில் ஒற்றுமையை உருவாக்கியிருக்கும் இவ்வேளையில் எம்மத்தியில் மோதல்களை உருவாக்கவும் பிரிவினைகளை ஏற்படுத்தவும் அவர்கள் தொடர்ந்தும் திட்டமிட்டுச் செயலாற்றுகின்றனர். முள்ளிவாய்க்காலில் மாவீரர்நாள் நடாத்தப்பட்டதாக யூடியுப்பிலும் சில இணையங்களிலும் வெளியான காணொளி மற்றும் அறிக்கை என்பன அவ்வாறு திட்டமிட்டுத் தமிழ்மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கிலேயே வெளியிடப்பட்டுள்ளன. அது மட்டுமன்றிச் சர்வதேச அரங்கில் விடுதலைப்புலிகளின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதும் எமக்குச் சர்வதேச அழுத்தங்களை ஏற்படுத்த வழிவகுப்பதுமான நோக்கங்களும் அச்சதிச்செயலின் பின்னணியில் மறைந்துள்ளன. அதிவளர்ச்சி அடைந்துள்ள இன்றைய தகவற் பரிமாற்ற யுகத்திற் திட்டமிட்டு வதந்திகளையும் பொய்ப் பிரச்சாரங்களையும் மிக இலகுவாகப் பரப்பி விட முடியும். மக்கள் விழிப்புடன் இருந்து செய்திகளின் நம்பகத் தன்மையைப் பகுத்து ஆராய வேண்டும். அதன் மூலம் மட்டுமே சிறிலங்கா அரசின் சதிவலையிற் சிக்காது விடுதலையை வென்றெடுக்க முடியும். அந்தச் செய்தியிற் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று தனிமனிதர்களின் மீது அவதூறு பரப்புவது விடுதலைப்புலிகளின் மரபு அன்று. அது சிங்கள அரசு தனது கைக்கூலிகளை வைத்து நடாத்த முற்படும் கபடநாடகத்தின் ஒரு பகுதி என்பதையும் தமிழீழ விடுதலைப்புலிகளாகிய எங்களுக்கும் அந்தச் செய்திக்கும் எந்தவிதமான தொடர்புகளும் அறவே கிடையாது என்பதையும் அனைவருக்கும் தெளிவாகத் தெரியப்படுத்துகின்றோம். 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

0 கருத்துக்கள் :