இன்னுமா தமிழகம் தூங்குகின்றது ? புகழேந்தி தங்கராசா.

17.12.12


இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மூடி மறைத்தது தொடர்பாக ஐ.நா. தலைமைச் செயலாளர் பான் கீ மூன் மீது விசாரணை நடத்தப்படவேண்டும் - என்று சென்னையில் நடந்த மாவீரர் நாள் நிகழ்ச்சியில் வைகோ வலியுறுத்தியதுதான் இந்தவாரத்தின் ஹாட் டாபிக். மூனை விசாரித்தால்தான் யார்யார் இதற்குத் துணைபோனார்கள் என்று தெரியவரும் - என்பது வைகோவின் வாதம். சென்றவாரம் லண்டனில் மாநாடு நடக்கிறது. இனப்படுகொலை நடந்தபோது அப்பாவின் மௌனத்துக்குத் தப்பாமல் துணைபோன முன்னாள் முதல்வர் ஸ்டாலின் முதலானவர்கள் பங்கேற்கின்றனர். சுதந்திரமான விசாரணை தமிழீழம் பற்றிய பொதுவாக்கெடுப்பு - என்று ஐ.நா.விடம் கோரிக்கை வைக்கிறார்கள். அவர்கள் சொல்லி வாய்மூடுவதற்குள்இ பான் கீ மூனையே கூண்டிலேற்றவேண்டும் என்கிறார் வைகோ. எந்த பான் கீ மூனை விசாரிக்கவேண்டும் - என்று வைகோ சொல்கிறாரோஇ அதே பான் கீ மூனைச் சந்தித்து டெசோ மாநாட்டுத் தீர்மானத்தைக் கொடுக்கத்தான் ஸ்டாலினின் தோழர்கள் முயன்றார்கள். மூனைக் காணமுடியவில்லை. ஒருவழியாக அவருக்கு அடுத்தநிலையில் உள்ளவரைச் சந்தித்து மனுவைக் கொடுத்தார்கள். அப்புசாமி இல்லாவிட்டால் குப்புசாமியிடம்தானே கொடுத்தாகவேண்டும். மனு கொடுப்பதைவிடஇ மனுகொடுத்தவருக்கு மரியாதை கொடுப்பதுதான் முக்கியம் என்பது தி.மு.கஇவின் நீண்ட நெடுங்கால கொள்கை முடிவு. மீனம்பாக்கத்தில் ஸ்டாலினுக்குத் தரப்பட்ட பிரமாண்டமான வரவேற்பின் மூலம் தமிழ்கூறு நல்லுலகம் மீண்டும் அதைப் புரிந்துகொண்டது. மூத்த தமிழ் உணர்வாளர்களுக்கு அது எரிச்சலை ஏற்படுத்தியதோ இல்லையோஇ குடும்பத்தில் மூத்தவர் நிச்சயமாகக் கொதித்துப் போயிருப்பார். 'மனுகொடுத்த மாவீரர்கள்' பான் கீ மூனைப் பார்க்க விஜய் நம்பியாரைத்தான் அணுகினார்கள் என்று இப்போது தகவல் வருகிறது. எந்த விஜய் நம்பியார்? வெளி உலகுக்கே தெரியாமல் காதோடு காது வைத்தமாதிரி தமிழினப்படுகொலையை இலங்கை செய்துமுடிக்க 'மூளை' காரணமாக இருந்தாரேஇ அதே விஜய் நம்பியார். நம்பியார் ஐ.நா.வின் ஆலோசகர். அவரது தம்பியார் இலங்கை ராணுவத்தின் ஆலோசகர். ஐ.நா.வுக்கும் இலங்கைக்கும் இடையே எப்படி கூட்டணி அமைந்தது என்பதை இதற்கு மேலுமா விளக்கவேண்டும்? அந்தக் கூட்டணி தர்மம்இ இங்கே காங்கிரஸுடனான தி.முஇக.வின் கூட்டணி தர்மத்தைவிட கொடுமையானது. நீ அடிஅடியென்று அடிஇ தமிழர்களின் அவலக்குரல் வெளியே கேட்டுவிடாதபடி ஐ.நா.வின் குரல்வளையை நான் பிடிபிடியென்று பிடிக்கிறேன் - என்பதுதான் திருவாளர்.விஜய்நம்பியாரின் குரூர பார்முலா. அவரிடம்தான் அப்பாயின்மென்டுக்காகப் போய் நின்றிருக்கிறார்கள்இ தமிழினக் காவலர்கள். இப்போது வெளியாகியிருக்கும் ஐ.நா.வின் உள்விசாரணை அறிக்கைஇ ஐ.நா.வின் முகத்தில் பான் கீ மூன் கோஷ்டி எப்படியெல்லாம் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியது என்பதை விலாவாரியாக விவரிக்கிறது. தமிழினப் படுகொலையைத் தடுக்க ஐ.நா. தவறியது - அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதை மூடிமறைத்தது - கடைசி சில தினங்களில் பல்லாயிரக் கணக்கானோரைக் கொன்றுகுவிக்க இலங்கை திட்டமிட்டிருந்தது ஐ.நாவுக்கு முன்னதாகவே தெரியும் - என்பதையெல்லாம் அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது அறிக்கை. கொஞ்சம் அசந்திருந்தால் இந்த விசாரணை அறிக்கை வெளியாகாமலேயே போயிருக்கும்இ முன்கூட்டியே அது கசிந்திராவிட்டால். அதை முடக்க இலங்கை மட்டுமல்லஇ அந்த உன்னதமான நண்பனுக்காக இந்தியாவும் சேர்ந்தல்லவா பாதாளம் வரை பாய்ந்திருக்கும்! இதுதெரிந்தேஇ உள்விசாரணை அறிக்கையைத் தயாரித்தவர்கள் அதனைக் கசியவிட்டிருக்கவேண்டும். முள்ளை முள்ளால்தானே எடுக்கமுடியும்! அப்படித்தான் எடுத்திருக்கிறார்கள் அவர்கள். வலி பொறுக்கமுடியாமல்இ அறிக்கை எப்படி லீக் ஆகலாம் - என்று ஒப்பாரி வைக்கிறார்கள்இ இந்தியாவின் நண்பர்கள். திருடனுக்குத் தேள் கொட்டிய மாதிரி திருட்டு முழி முழித்துக் கொண்டிருக்கிறது இந்தியா. மகாதேவன் - சகாதேவன் கணக்காய் தமிழர்களின் மென்னியை முறித்த விஜய் நம்பியார் - சதீஷ் நம்பியார் பற்றி முதல்முதலாக எழுதியவர்இ பிரபல பிரெஞ்சு செய்தியாளர் பிலிப் போலோபியன். இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலைதான் என்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய 'லீமாண்ட்' பிரெஞ்சு நாளேட்டில் போலோபியன் இதைப்பற்றி எழுதி நான்கு ஆண்டு ஆகிறது. "அப்பாவித் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்படுவதையும்இ உயிரிழப்போர் எண்ணிக்கையையும் முழுமையாக அறிந்திருந்தபோதும் ஐ.நா. அதை மூடி மறைத்திருக்கிறது. உண்மையான விவரங்களை வெளியிட்டால் ஐ.நா. அலுவலகமே கொழும்பில் செயல்படமுடியாது என்றும்இ அதன் அலுவலர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் விஜய் நம்பியார் இலங்கையிலிருந்த ஐ.நா. ஊழியர்களிடம் கூறினார்" என்பது போலோபியனின் குற்றச்சாட்டு. இலங்கையில் இருக்கவேண்டுமென்றால் இலங்கை அரசுடன் ஒத்துப்போகவேண்டும் - என்று விஜய் சொன்னதாக அப்போது போலோபியன் சொன்னதைஇ இப்போது ஐ.நா.வின் உள்விசாரணை அறிக்கை சொல்கிறது. இவ்வளவு தூரம் அசிங்கப்பட்ட பிறகும்இ சரியான புள்ளிவிவரங்களை உறுதிசெய்ய முயன்று கொண்டேயிருப்பதாக ஐ.நா. கூறிக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? வெட்கக்கேட்டிலேயே டிஸ்டிங்ஷன் ஏதாவது இருந்தால் அதை வாங்கியே ஆகவேண்டும் என்று பான் கீ மூனும் நம்பியாரும் போட்டிபோடுகிறார்களோ என்னவோ! நடத்திய இனப்படுகொலைக்குத் தடயமே இல்லாத அளவுக்கு நான்கு ஆண்டுகளாகத் துப்புரவாகத் துடைத்து எடுத்துக் கொண்டிருக்கிறது இலங்கை. இதற்குப் பிறகு அங்கே போய் புதைபொருள் ஆராய்ச்சி நடத்தப் போகிறாரா பான் கீ மூன்? பாதிக்கப்பட்ட பகுதிக்குள் சுதந்திர ஊடகங்களை அனுமதிக்கக் கூட இலங்கை மறுப்பது ஏன் என்பதுகூடத் தெரியாத அசட்டு அம்பியா அவர்? ஐ.நா.வின் உள்விசாரணை அறிக்கைஇ பான் கீ மூன் மற்றும் விஜய் நம்பியார்களின் பதவிக்கு ஆப்பு வைத்துவிடும் அளவுக்குக் கடுமையாக இருக்கிறது. இனப்படுகொலை நடந்த சமயத்தில் ஐ.நா. திட்டமிட்டே மௌனம் சாதித்தது- என்பது இந்த அறிக்கையிலிருந்து தெளிவாகிறது. இது ஐ.நா.வின் கடுமையான தோல்வி - அதேசமயம் திட்டமிட்ட தோல்வி என்று குறிப்பிடுகிறது அறிக்கை. ஆயிரமாயிரம் அப்பாவித் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பை ஐ.நா. தட்டிக்கழித்துவிட்டது என்பது இந்த அறிக்கை வெளிப்படையாகவே சுமத்துகிற குற்றச்சாட்டு. தங்களைச் சுற்றி அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவதைத் தடுப்பது தங்களது பொறுப்பு என்பதையே ஐ.நா. அதிகாரிகள் புரிந்துகொள்ளவில்லை - என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது சர்வதேசத்தின் மனசாட்சியை நிச்சயம் உலுக்கும். உயிரிழந்தோரின் உண்மையான எண்ணிக்கையை வெளியிடக்கூட ஐ.நா. தயங்கியது - என்று குறிப்பிடுவதிலிருந்து பான் கீ மூன் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது தெளிவாகப் புரிகிறது. "உயிர்ப்பயத்தில் இருந்த அப்பாவித் தமிழர்கள் 'வெளியேற வேண்டாம்' - என்று ஐ.நா. ஊழியர்களிடம் கெஞ்சியும்இ அதைக் கேட்காமல் அவர்கள் வெளியேறியது கொடுமை. அங்கே என்ன நடக்கிறது என்பதை வெளி உலகுக்கு அவர்கள் தான் எடுத்துச் சொல்லியிருக்கவேண்டும். அந்தக் கடமையைக்கூட ஐ.நா. செய்யவில்லை. நிலைமை அப்படியொன்றும் மோசமில்லை என்பதைப் போல் அவர்கள் நடந்துகொண்டது மன்னிக்கமுடியாதது" என்று ஐ.நா. முன்னாள் அதிகாரி ஒருவர் வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டுகிறார். 2009ல்இ இலங்கை ராணுவத்தின் ஈவிரக்கமற்ற போக்கால் குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதை அம்பலப்படுத்திய சர்வதேச குழந்தைகள் நிதியத்தின் (யூனிசெப்) செய்தித் தொடர்பாளர் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டார். மூச்சுபேச்சில்லாமல் பிணம் மாதிரிக் கிடந்தது ஐ.நா. ஐ.நா.வின் இந்தக் கள்ள மௌனம்இ விஜய் நம்பியாராலும் சதீஷ் நம்பியாராலும் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டுஇ பான் கீ மூன் மூலம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. சர்வதேசத்தின் கண்ணில் மண்ணைத் தூவிஇ நடந்த இனப் படுகொலையை மறைக்கவேண்டும் - என்பதே இந்தச் சதியின் நோக்கம் என்பது சிலரின் கருத்து. அது முழு உண்மையாயிருக்க முடியாது. சர்வதேசத்தின் கண்ணில் மண்ணைத் தூவுவதல்ல நம்பியார்களின் நோக்கம். இந்தியர்களாயிற்றே அந்த மகானுபாவர்கள். தமிழகத்தின் அரசியல் போக்கை அறிந்தவர்களாயிற்றே! ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவது ஐ.நா. வாயிலாகத் தெரியவந்தால்இ 7 கோடி தமிழர்கள் இருக்கிற தமிழ்நாடு நிச்சயமாகக் கொதித்து எழும் என்பது அவர்களுக்குத் தெரியும். இலங்கையிலிருந்து 26 மைலில் 7 கோடி பேர் கொதித்து எழுந்தால்இ விலகிச்செல்ல நினைக்கும் உலக நாடுகள் கூட வேறுவழியில்லாமல் அதில் தலையிட வேண்டியிருக்கும் என்பதும் பான் கீ மூன் கோஷ்டிக்குத் தெரியும். தமிழகத் தமிழர்கள் கண்ணில் மண்ணைத் தூவுவதுதான் அவர்களது உண்மையான நோக்கமாக இருந்திருக்க வேண்டும். நாம்தான் எவன் மண்ணைத் தூவினாலும்இ முட்டாள்தனமாக கண்களை விரித்துக் காட்டிக்கொண்டிருக்கிற ஜடங்களாயிற்றே! அவர்கள் தூவிக் கொண்டேயிருந்தார்கள்... இங்கே அடைமழையாக ஏற்பட்டிருக்க வேண்டிய எதிர்ப்பு மழை சின்னக் குழந்தை சிறுநீர் கழிப்பதைப்போல் தூறிக்கொண்டு இருந்தது. அங்கே இனப்படுகொலை நடக்கும்போதுஇ இலங்கைக்கும் ஐ.நா.வுக்கும் இடையே பேரம் தான் நடந்திருக்கிறது. "இங்கே இருக்கவேண்டுமென்றால் பொத்திக் கொண்டு இரு" என்று ஐ.நா.வுக்கு போதித்திருக்கிறது புத்தனின் இலங்கை. வேறு வழியில்லாமல் ராஜபட்சே சகோதரர்களின் ஜதிக்கு ஏற்ப சலங்கை கட்டி ஆடியிருக்கிறது ஐ.நா. இப்படியொரு நடைப்பிணத்திடம் தான்இ அமைதிக்கும் சமாதானத்திற்குமான சாவி இருக்குமென்றால்இ வேறென்ன ஆகும்இ அப்பாவித் தமிழர்களின் ஆவி தான் போகும். ஒரு சந்திப்பின்போது இயக்குநர் ஆர்.சி.சக்தி மனம்நொந்து சொன்னதை இந்த இடத்தில் நினைவுகூரவேண்டும். "இந்தியா காப்பாற்றியிருக்கவேண்டும் அவர்களை... காப்பாற்றுவதற்குப் பதில் அவர்களைக் கொன்று குவிக்கத் துணைபோனது. அதைப் பார்த்தபிறகாவது தமிழகம் அவர்களைக் காப்பாற்றியிருக்க வேண்டும். இங்கே பதவியிலிருந்தவர்களோஇ தமிழர்களைக் காப்பாற்றுவதை விடஇ நாற்காலிகளைக் காப்பாற்றுவதே முக்கியம் என்று முடிவெடுத்துவிட்டனர். ஐ.நா. காப்பாற்றியிருக்கவேண்டும்.. அது அவர்கள் பக்கம் பார்வையைக் கூடத் திருப்பவில்லை. இறைவனாவது காப்பாற்றுவான் என்று பார்த்தேன்.. அந்தப் பாவிக்கும் கண் இல்லாது போய்விட்டது" என்றார் அவர். ஐ.நா. திட்டமிட்டுத்தான் அவர்களைப் பார்க்கத் தவறியிருக்கிறது என்பதுதான் இப்போது அம்பலமாகியிருக்கிறது. சர்வதேசத்தின் நெருக்கடிகளுக்குப் பின்தான்இ இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிக்க மூவர் குழுவை அமைத்தார் பான் கீ மூன். அந்தக் குழுஇ ஓரளவு நேர்மையாகவே செயல்பட்டது. அந்தக்குழுவின் அறிக்கை வெளியானதும்இ 'பான் கீ மூன் ஒரு சர்வதேச மாமா (பிம்ப்)' என்று சிங்கள ஜனநாயகவாதிகள் நாகரிகமாக விமர்சித்ததைப் பார்த்தபோதுஇ அதன் நேர்மையைப் புரிந்துகொள்ள முடிந்தது. அந்த அளவுக்குஇ இலங்கையின் இனவெறியாட்டத்தைப் பட்டியலிட்டிருந்தது மூவர் குழு அறிக்கை. இப்போது வெளியாகியுள்ள உள் விசாரணை அறிக்கைஇ பான் கீ மூன் கோஷ்டியின் திட்டமிட்ட கையாலாகாத்தனத்தைப் பட்டியலிட்டிருக்கிறது. இவ்வளவுக்கும் பிறகுஇ பான் கீ மூனிடம் போய் மனு கொடுக்க முண்டியடிப்பதா? மனு கொடுத்துவிட்டு வருகிறவரை வரவேற்க முண்டியடிப்பதா? பான் கீ மூனைக் கூண்டில் ஏற்று - என்று குரல் கொடுப்பதா? எது நியாயம் என்று ஒவ்வொரு தமிழனும் மனசாட்சியோடு முடிவுசெய்யவேண்டும். எனக்கிருக்கிற ஆச்சரியமெல்லாம்இ ஐ.நா.வின் கள்ள மௌனத்தை உள்விசாரணை அறிக்கை தோலுரித்த பிறகும்இ இங்கேயிருக்கிற எந்த ஐ.நா. அலுவலகத்தின் முன்பும் ஓர் அடையாள ஆர்ப்பாட்டம் கூட நடைபெறவில்லையே என்பதுதான்! இன்னுமா தூங்கிக் கொண்டிருக்கிறது தமிழகம்!

0 கருத்துக்கள் :