பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்குமாறு கோருமளவிற்கு அரசியல்வாதிகள் தரம்குறைந்துள்ளனர்

4.12.12

இலங்கையில் பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்குமாறு கோருமளவிற்கு அரசியல்வாதிகள் தரம்குறைந்துள்ளனர் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். தேர்தலில் மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் இவ்வளவு இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது. இவ்வாறான நிலைமை சமூகத்திற்கே களங்கத்தை ஏற்படுத்தும். பௌத்த பிக்குகளை இழிவுபடுத்தும் நோக்கில் சிலர் செயற்பட்டு வருகின்றனர்.வேறு மதத்தவர்களின் ஆலோசனைக்கு அமைய இவ்வாறு பௌத்த பிக்குகள் இழிவுபடுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :