வட்டுக்கோட்டையில் இளைஞரால் சிறுமி பாலியல் பலாத்காரம்

29.12.12


காதலிப்பதாகக் கூறி 15 வயது சிறுமியொருவரை பாலியல் பலாத்காரம் செய்த 26 வயதுடைய இளைஞரை வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் வட்டுக்கோட்டை கிழக்கில் இடம்பெற்றதாக யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.ஜிப்ரி தெரிவித்தார். இம்மாதம் 20ஆம் திகதி குறித்த இளைஞர் அச்சிறுமியை காதலிப்பதாகக் கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளார் . இக்குற்றம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :