தமிழீழ இலட்சியத்தில் விடுதலைப்புலிகள் உறுதியாக இருந்தனர்-அமெரிக்க தூதரகம்

28.12.12


சுதந்திரம் பெற்ற எரித்திரியாவே தமது போராட்டத்துக்கான மாதிரி என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் தெரிவித்தார். இந்த கருத்தை ரொய்ட்டர் செய்தியாளரிடம் அவர் கூறியதாக அமெரிக்க தூதரகம் 1994 ம் ஆண்டு வாசிங்டனுக்கு தெரிவித்தது என்று விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது. எனினும் பாலசிங்கத்தின் கருத்துக்கு அமெரிக்கத் தூதரகம் தமது விமர்சனத்தை வெளியிட்டது. அதில், அடீஸ் அபாபாவின் அரசாங்கம் கவிழ்ந்ததன் காரணமாகவே எரித்திரியாவில் சுதந்திரத்தை பெறமுடிந்தது. இலங்கை அரசாங்கத்தை அவ்வாறு நோக்குவது பொருத்தமற்றது என்று அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டதாக விக்கிலீக்ஸில் தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் பொதுநிர்வாகத்தை நோக்கும் போது அவர்கள் தமிழீழம் என்ற நோக்கத்துக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையை காணமுடிகிறது என்றும் அமெரிக்க தூதரகம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளை உங்களின் நிர்வாகத்தின் கீழ் அரசாங்கமே செயற்படுத்துகிறது. ஏன் அதனையும் நீங்கள செய்யமுடியாது என்று ரொய்ட்டர் செய்தியாளர் அன்டன் பாலசிங்கத்திடம் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த பாலசிங்கம், அதனை தாம் செய்யமுடியாது என்றும், அரசாங்கத்தை கொண்டு அவற்றை செய்விப்பதாகவும் குறிப்பிட்டதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்திருந்தது. இதற்கிடையில் விடுதலைப்புலிகளின் முகாம்கள் இனங்காணப்படாமை காரணமாக இலங்கைப் படையினர் இலக்கின்றி செல் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் ரொய்ட்டர் செய்தியாளரை கோடிட்டு அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

0 கருத்துக்கள் :