மனைவி கள்ளக்காதல்: மனைவி மகனை, கொன்றுவிட்டு கணவர் தற்கொலை

6.12.12


சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் உள்ள கெங்கவல்லி மசூதி தெருவை சேர்ந்தவர் அபுசாலிப் (வயது-39), உள்ளூரில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி பெயர் தாஜிராபேகம் (வயது- 32), இவர்களுக்கு தாசிக் (வயது-12), தாஜ்மீர் (வயது- 7) என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. இவரது மளிகை கடைக்கு எதிரில் தையல் கடை வைத்திர்ந்த ஒருவருக்கும், அபுசாலிப்பும் பக்கத்து கடைக்காரர் என்ற முறையில் நட்பு ரீதியாக பழகிவந்துள்ளனர். இது போலவே, அபுசாலீப்பின் மனைவி தாஜிராபேகத்துக்கும் அந்த தையல் கடைக்காரருடன் நட்பு இருந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மளிகை கடையை மூடிவிட்டு அபுசாலிப் வேலைக்காக சவூதி அரேபியாவிற்கு சென்று விட்டார். அதற்கு பின்னர், தாஜிராபேகத்துக்கும் அந்த தையல் கடைக்காரருக்கும் சாதாரணமாக இருந்த நட்பு கூடா நட்பாக மாறியுள்ளது. இதுகுறித்து உறவினர்கள் மூலம் தகவல் தெரிந்துகொண்ட அபுசாலிப் அங்கிருந்தபடியே மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், தாஜிரா பேகத்துக்கும், அந்த தையல் கடைக்காரருக்குமான கள்ளக்காதல் தொடர்ந்து வந்துள்ளது. இருவரும் தனியாக குடும்பம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், கடந்த வாரம், சவுதியிலிருந்து புறப்பட்டு வந்த அபுசாலிப் மனைவியை கண்டித்துள்ளார். பிரச்சனை பெரிதாகி இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது. அதனால், இந்த விவகாரம் உள்ளூர் ஜமாத்துக்கு சென்றுவிட்டது. தன்னால் அந்த தையல் கடைக்காரரை பிரிந்து வரமுடியாது என்று தாஜிராபேகம் கூறிவிட்டார். கணவனும், மனைவியும் பிரிந்து விடுவது நல்லது என்று முடிவு செய்த உள்ளூர் ஜமாத் தலைவர்கள் இன்று கூடிப்பேசி பிரச்சனையை முடித்துக் கொள்ளலாம் என்று கூறி இருவரையும் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இதனால், மனமுடைந்து போயிருந்த அபுசாலிப், 05.12.2012 இரவு குளிர் பானத்தில் பூச்சி மருந்தை கலந்து தனது இரண்டு மகனுக்கும், மனைவிக்கும் கொடுத்து விட்டு, பிறகு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 06.12.2012 காலை, அபுசாலிப்பின் முதல் மகன் தாசிக் எழுந்து வந்து என்னுடைய அப்பா தூக்குபோட்டு தொங்குகிறார் என்று சொன்ன பிறகு தான் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தகவல் தெரிந்துள்ளது. அதன்பிறகே, கெங்கவல்லி போலிசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இரண்டு மகன்களுக்கும், மனைவிக்கும் முதலில் குளிர்பாணத்தில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்து அவர்கள் மயங்கிய பிறகு, இரண்டாவது மகன் தாஜ்மீரையும், மனைவி தாஜிராபேகத்தின் கழுத்திலும் கயிற்றை போட்டு இருக்கியுள்ளார் அபு சாலிப். ஆனால், முதல் மகன் தாசிக் கழுத்தில் கயிற்றை போட்டு இருக்காமல் விட்டதால் அவர் பிழைத்துகொண்டார். இச்சம்வம் குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துக்கள் :